Friday, February 24, 2012

உடலைப் பெருக்க வைக்குமா செக்ஸ்?



அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதால் உடம்பு குண்டாகி விடும் என்ற ஒரு நம்பிக்கை பெண்கள் மத்தியில் உள்ளது. ஆனால் இதில் சுத்தமாக உண்மை இல்லை என்பது டாக்டர்களின் கருத்து.

உடல் குண்டாகும் என்பதைத் தவிர மார்பகம் பெருத்து விடும், இடுப்பளவு அதிகரித்து விடும் என்ற நம்பிக்கையும் பெண்களிடம் உள்ளது. இருப்பினும் இதெல்லாம் வெறும் மாயை என்பது டாக்டர்களின் கருத்து.

மன ரீதியான மாற்றத்திற்கும், உடல் ரீதியான மாற்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. செக்ஸ் வைத்துக் கொள்வதற்கும், உடல் பெருக்கத்திற்கும் நேரடித் தொடர்பு எதுவும் கிடையாது. மேலும் தினசரி அல்லது அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதால் மார்பகம் பெருக்கும் என்பதற்கோ, இடுப்பளவு அதிகரிக்கும் என்பதற்கோ ஆதாரம் எதுவும் இல்லை.

மேலும் ஆணின் விந்தனு, பெண்ணின் ரத்தத்துடன் கலக்கும் என்பதும் கூட ஒரு மாயைதான். அதிலும் உண்மை இல்லை. 

மேலும் ஒரு ஆணின் 2 முதல் 3 மில்லி அளவிலான விந்தனுவில் அதிகபட்சம் 15 கலோரி மட்டுமே இருக்கும். எனவே உடலுறவால் பெண்களுக்கு உடம்பு பெருத்து விடும் என்பது நிச்சயம் உண்மையில்லை என்கிறார்கள் டாக்டர்கள்.
அதேசமயம், திருமணத்திற்குப் பின்னர் உடல் பெருக்கம் ஏற்படுவது என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் நடக்கும் நிகழ்வுதான். ஆனால் இதற்கும், செக்ஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே உண்மை. ஒரு நிரந்தரமான உறவு அமைவது ஏற்படுத்தும் சந்தோஷத்தால் ஆணும் சரி, பெண்ணும் சரி தங்களது உடல் ரீதியான விஷயங்களில் கவனத்தை படிப்படியாக இழக்கிறார்கள். இதனால் அவர்கள் டயட், உடற்பயிற்சி போன்றவற்றில் ஆர்வம் குறைகிறது. இதனால்தான் அவர்களுக்கு எடை கூடுகிறதே தவிர செக்ஸ் உறவால் அல்ல என்பது டாக்டர்கள் தரும் விளக்கம்.

மேலும் பேச்சலர்களை விட திருமணமானவர்கள் அதிகம் சாப்பிடுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறதகு. இந்த அதிகரித்த உணவுப் பழக்கமும் கூட உடல் எடை கூடுவதற்கு ஒரு முக்கியக் காரணம்.

எனவே திருமணத்திற்குப் பின்னர் அதிக அளவில் செக்ஸ் வைத்தால் உடல் எடை கூடும் என்ற எண்ணத்தை கைவிடுங்ககள். மாறாக திருமணத்திற்குப் பிறகு உடல் வனப்பி்ல அதிக கவனத்தை செலுத்துங்கள். டயட்டை முறையாக கடைப்பிடிப்பது, உடற் பயிற்சிகளைத் தொடருவது என்பதில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். மாறாக செக்ஸில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை.

Thursday, February 23, 2012

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற முடியுமா ???? – முடியும் !!!! skymedi 2gb fix software



1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற முடியுமா ???? – முடியும் !!!!
இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1gb கொள்ளளவு  உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார் கள்.அந்த கார்டை எப்படி 2gb கார் டாக என்பதை கிழே கொடுக்கப் பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக  மாற்றலாம்.

1.இந்த வழிமுறையானது 1GBமெமரி கார்டில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB மெமரி கார்டை மட்டுமே பயன்படுத்துங்கள்.

2. இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் மெமரி கார்டில் உள்ள தரவுகளை எல்லாம்  நீங்கள் ஒரு பதிவு எடுத்துவைத்து கொள் வது நல்லது
3.இப்போது இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்




4. தரவிறக்கம்  செய்த மென் பொருளை ஓபன் செய்யும்போ து இது போன்ற வடிவில் காட் டும்.

5.  மென்பொருள் ஓபன் செய்த உடன் அதில் 955MB DEFAULT-க  காட்டப்படும்  ஆதலால் மேலே கூறியதுபோல் 1GB மெமரி கார் டை மட்டும் பயன் படுத்தவும் .
6. இப்போது உங்கள் மெமரி கார் டை கணினியில் சொருகவும். படத்தில் தோன்றுவது போல 955MB காட் டபடும்




7. (FIX)பிக்ஸ் என்ற option தேர்வு செய்து Yes பட்டனை கிளிக் செய்யவும்
8. இப்பொது உங்களது மெமரி கார்டில் உள்ள தரவுகள் எல்லா ம் அழிந்து  2GB மெமரி கார்டாக மாறிவி டும்.

 9. மெமரி கார்டை கணினியில் அகற்றிவிட்டு மீண்டும் கணினி யில் சொருகவும். மெமரி கார்டி ன் அளவு 1912MB என்று காட்டபடும்.

டிஸ்கி - கொள்ளளவில் மாற்றம் ஏற்படும் இருப்பினும் அது 1GB ஆகதான் இருக்கும். இருப்பினும் இதன் மூலம் உங்கள் நண்பா்களை ஏமாற்ற முடியும். எல்லாம் ஒரு விளையாட்டு தாங்க..

ஆண்கள் இளமையுடன் இருப்பதற்கான ரகசியம்..!!



ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ தாண்டினாலும், என்றும் மார்க்கண்டேய னாகவே தோற்றமளிப்பர். . இந்த மார்க்கண்டேய தோற்றத்தை தக்க வைத்துக்கொள்வது ஒன்றும் பெரி ய கம்ப சூத்திரமோ அல்லது பிரம்ம வித்தையோ அல்ல….! மாறாக கொஞ்சம் மெனக்கிட்டால் வயது ஏறிக்கொண்டு போனாலும், குறை ந்த வயது தோற்றத்துடன் நீண்ட காலம் இருக்க முடியும்.
நமது வயதை முதலில் வெளிப்படு த்துவது சருமம் தான், அதனை ஒழுங்காக, சீராக பராமரித்தாலே நமது ஆயுட்காலமும் நீடித்து இருக்கும். அப்படி என்றும் இளமையு டன் இருக்க இதோ சில டிப்ஸ். . . ! .
நாம் அதிகமாக சூரிய வெளிச் சத்தில் பயணிப்பதாலும், எண் ணெய் அதிகமுள்ள உணவுக ளை உட்கொள்வதாலும், மாசுள் ள காற்றை சுவாசிப்பதாலும் நமது சருமத்தில் முதுமை தோற் றம் தெரிகிறது. இதனை தடுக்க, சிறந்த முதுமை தடுப்பு (ஆன்டி ஏஜிங்) தயாரிப்புகளை பயன்படு த்தவது நல்லது. மேலும் அதிக மான தண்ணீர் பருகுதல் சரும த்தை பாதுகாக்கும்



பெண்களின் சருமத்தை காட்டிலும் ஆண்களின் சருமம் 20 விழுக்காடு கூடுதல் கடினத்தன் மையுடன் இருக்கும். ஆயி னும் வயது கூடும்போது கொல்லாஜன் எனும் புரதம் குறைவதால் சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. உடல் கூறுவியலின்படி பெண்க ளை காட்டி லும் ஆண்களின் முதிர்ச்சி சில காலத்திற்கு பிறகு தான் தோன்றும், ஆனால் ஒரு சில பழக்கவழக்கங்களினால் ஆண்களுக்கு இயல் பான வயதை காட்டிலும் முதுமையான தோற்றம் காணப்படுகிறது.
தொடர்ந்து ஷேவிங் செய்வதன் கார ணமாக முகத்தில் முதிர்ச்சி தோன் றும், அதனால் ஈரப்பதத்துடன் கூடிய ஷேவிங் கிரீமை பயன் படுத்துவது நல்லது. மேலும் ஷேவிங் செய்யும் போது முடிகள் வளர்ந்திருக்கும் திசையில் ஷேவ் செய்து, வெதுவெது ப்பான தண் ணிரால் முகத்தை கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் முக ம் வாடாமல் புத்துணர்ச்சியுடன் தோ ன்றும்.
ஆண்கள் என்றும் இளமையுடன் இரு க்க தொடர்ந்த உடற்பயிற்சியும் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகை கள், உடலுக்கு குளிர்ச்சி தரும் இறைச்சிகள் மற்றும் மீன் போன்ற ஆரோக்கிய உணவுகளை உட் கொள்ள வேண்டும். உடல் திசுக்க ளை புதுப்பிக்கும் திறனுடைய ஆன்டிஆக்ஸிடன்ட் குணம் நிறைந்த பேக் செய்யப்பட்ட உணவு களை உட்கொள்வதால், முகம் சுருக்கம் இல்லாமலும் மென்மையாக வும் காணப்படும்.
மேலும் பசலை கீரை, அவுரி நெல்லிகள், கேரட், தக்காளி, பச்சை தேநீர் போன்றவற்றை யும் சேர்த்துகொள்வது மிக வும் நல்லது.
சருமத்தை இளமையுடன் வைத்திருக்க மது மற்றும் புகைப் பிடித்தலை தவிர்க்கவும். சிகரெட்டுகளில் உள்ள நிக்கோட் டின் உடலின் இரத்த ஓட்டத்தை குறைப்பதால் சருமத்திற்கு தேவை யான சத்துகள் சென்று அடைவதில்லை, ஆகையால் சுருக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
தூக்கம் கெடுவதால் உடல்நிலை பெரி தும் பாதிக்கப்படும் என்பதை அநேகமா னோர் அறிவதில்லை. இரவில் குறைந் தது 6-7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் அவசியம் என்பதும் இதைத் தொடர்ந்து கடை பிடித்து வந்தால் மனதில் புத்து ணர்ச்சி மட்டுமின்றி, உடல் ஆரோக்கி யத்திலும் குறிப்பாக சருமத்திலும் பொலிவு ஏற்படும்.
இது தவிர, உடல் ஆரோக்கியத்திற்கும், உடலுறவு பழக்க வழக்கத்திற்கும் நெருங் கிய தொடர்பு இருப்பதால், அதுகுறித்த விழிப்புணர் வை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
இவையெல்லாவற்றிற்கும் மேலாக, ஆண் கள் தனது கவலைகளை மறந்து மகிழ்ச்சி யுடன் இருந்தாலே, முகத்தில் பொலிவும் இளமை யும் கூடிக்கொண்டே போகும். . . !

Wednesday, February 22, 2012

பெண்கள் மூக்கு குத்திக்கொள்வது ஏன் ?



மூக்கு மற்றும் காது குத்திக்கொள்வது ஏன் என உங்களுக்கு தெரியுமா? அதாவது ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதாவது பவர் அதிகம். இதனால் பெண்கள் மத்தியில் நிற்பவர்களுக்கு அசௌகரியமாக இருக்கும் இதனால் பெண்கள் மூக்கு குத்தி கொள்ளும் வழங்கம் உருவானது.
மூக்கு குத்துவதினாலும், காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.
சிறுமியர் மூக்குத்தி அணிவதில்லை. பருவப் பெண்களே அணிகிறார்கள். ஏனெனில் பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப் படுகிறது.
மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள்.
அந்தக்காலத்தில் ஆண்களும் காது குத்திக்கொள்வது இதனால்தான் ம்ம்ம்…… இந்தக்காலத்திலும் ஆண்கள் காது குத்தும் வழங்கம் வந்துவிட்டது ஆனால் கவரிங் எந்த பிரயோசனமும் இல்லை வெறும் அழகுக்கு மட்டுமே தவிர ஆரோக்கியத்துக்கு சரிவராது.

முதல் இரவில் பால் ஏன்?




உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிறந்த குழந்தை முதல் மரணப் படுக்கையில் கிடக்கும் முதியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ளது. பாலில் பல வகைகள் உண்டு.
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குணம் உள்ளது.

தாய்ப்பால் ஒவ்வொரு குழந்தைக்கும் தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் மற்றும் ஈடு இணையற்ற உணவாகும். பசும்பால் என்பது இயல்பாகவே இனிப்பானது. உடலுக்கு குளிர்ச்சி தருவது. ஆனால் எளிதில் ஜீரணமாகாது.எருமைப்பால் அதிகப் கொழுப்பு நிறைந்தது. உடலுக்கு நல்லது. எருமைப்பால் பசும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்புச்சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தாமதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.


ஆட்டுப்பாலில் மனித உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் உள்ளன. ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால் அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சு திணறல் போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது.
வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பசும்பால் சாப்பிட்டால் பேதி அதிகமாகப் போகும். ஆனால் ஆட்டுப்பால் அதை கட்டுப்படுத்தும்!

சோர்வாக இருப்பவர்களுக்கும், தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்கு போன்றவற்றால் அவதிப்படுகிறவர்களுக்கும், ரத்தக் கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பசும்பால் மருந்தாக உள்ளது.
தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்குப் பால் நல்ல தூக்க மருந்து.




ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது. இதனால் தான் நம் பெரியவர்கள் முதல் இரவில் பால் கொடுத்து அனுப்புகிறார்கள் போலும்.   வெள்ளை மனதுடன்  வெள்ளை நிறப் பாலை பகிர்ந்து கொள்ளும் போது அன்னோன்யத்தின் ஆரம்பம்!
பால் குடித்ததும் புத்துணர்வு தரக்கூடியது. பசும்பால் குடித்து வந்தால் உடல் பலம், மூளை பலம் இரண்டையும் பெறலாம். முதல் இரவிற்கான பலத்தையும் பெறலாம். தூக்கம் வராமல் தவிப்பர்களுக்குத் தான் பால் நல்ல தூக்க மருந்து.ஆகையால் தூக்கம் வரும் என பயப்படவேண்டியதில்லை! மேலும் சூடான பாலின் மேல் படரும் ஆடையை குடிக்கும் முன் தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவேண்டுமாம்! பின்னால் இதற்கு தேவையிருந்தாலும் இருக்கலாமாம். ஒன்லி ஃபார் லூப்ரிக்கேஷன் பயன்பாட்டிற்குமட்டும்! புரிந்துகொள்ளுங்கள் இதற்கு மேல் விளக்கமுடியாது!!
பின்குறிப்பு: பாலில் அஷ்வகந்தா என்ற ஒரு சித்த மருந்தை கலந்து குடித்தால் குதிரையின் அதீத கனைப்பு இசை முதல் இரவின் அறைக்கு பிண்ணனி இசையாக இருக்குமாம்!!

Amirtha Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger